தன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.
கையை திருகி! கழுத்தில் ஏறி மிதித்து! காவலாளியை சித்ரவதை செய்யும் முதலாளி! அதிர வைக்கும் காரணம்!
பெங்களூருவில் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வரும் சலீம் கான் என்பவர் தன்னிடம் காவலாளியாக பணியாற்றியவரை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.இந்த வீடியோவில் காவலாளியின் கையை திருகி அவர் கழுத்து மீது சலீம் கான் ஏறி நிற்கும் காட்சி பதற வைக்கிறது.
காவலாளி அலுவலகத்தில் இருந்த 50 ஆயிரம் பணத்தை திருடியதற்காக சலீம் கான் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எச்.எஸ்.ஆர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாக உள்ள சலீம் கானை தேடி வருகின்றனர். ஈசா பன்ட் பெங்களூரு தென்கிழக்கு மண்டல காவல்துறை ஆணையர் கன்னடம் பேட்டி மொழியாக்கம்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பெங்களூரு நகரில் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வரும் சலீம் கான் தனது காவலாளியை அடிக்கும் காட்சி இது. எச்.எஸ்.ஆர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார் காரணம் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகுதான் தெரியவரும்.