ஓபிஎஸ் ஓட்டுக்கு 1000 ரூபாய் நோட்டு கொடுக்கிறாராம்! மீண்டும் நிதானம் இழந்த ஸ்டாலின்! வைரலாகும் வீடியோ உள்ளே!

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் உளறிக்கொட்டி கிண்டலுக்கு ஆளான ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு கடைசி நாளிலும் செய்தியாளர்களை சந்தித்து பல்பு வாங்கியுள்ளார்.


வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர் ஆனந்த் பணப் பட்டுவாடா செய்த புகாரில் வேலூர் தொகுதியில் தேர்தல் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் மு க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயகப் படுகொலை என்று கூறினார் ஸ்டாலின். தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் மூலம் சோதனை நடத்துவது தங்களை அச்சுறுத்துவதற்காக நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இதற்கெல்லாம் திமுக பயப்படாதே என்று கூறிய ஸ்டாலின் உண்மையில் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்றால் தேனியில் தான் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு அடுத்து ஸ்டாலின் பேசியதுதான் அவர் நிதானம் இழந்து விட்டார் என்பதற்கு ஆதாரமாக அமைந்து விட்டது. அதாவது தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றிபெற வைப்பதற்காக வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பதற்காக ஆதாரம் இருப்பதாகக் கூறி செய்தியாளர்களை அதிர வைத்தார் அவர்.

1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அப்படி இருக்கும்போது செல்லாத நோட்டு ஓபிஎஸ் வாக்காளர்களுக்கு கொடுக்க போகிறார் என்று செய்தியாளர்கள் கிசுகிசுத்து விட்டு சென்றனர். ஸ்டாலின் இப்படி கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.