நீங்களாவது சொல்லுங்கள்! அமீத் ஷாவிடம் கண்ணீர் விட்டு கதறிய ஓபிஎஸ்!

நான் செத்தாலும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்று பன்னீர் சொல்லி வாயை மூடுவதற்குள், அவர் நிஜமாவே பா.ஜ.க.வில் சேரத்தான் போகிறார் என்று மீண்டும் சொல்லி டென்ஷனைக் கிளப்பிவிட்டார் தங்கதமிழ்செல்வன்.


இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் யாரும் தனக்காக பேசவில்லை என்பதில் பன்னிருக்கு செம வருத்தமாம். அதனால் இப்போது அ.தி.மு.க.வை நம்பாமல் பா.ஜ.க. பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார்.

நான் வாரணாசிக்கு மோடிக்கு ஆதரவு கொடுக்கத்தான் வந்தேன், கட்சியில் சேர்வதற்கு இல்லை என்று சொல்லுங்கள் என்று இப்போது பியூஸ் கோயல் மற்றும் அமீத் ஷாவிடம் வேண்டுகோள் வைத்துவருகிறாராம். அவர்கள் ஏதாவது பேசினால், கட்சி மாறுவது குறித்த பேச்சு அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறார்.

ஆனால், பா..ஜ.க. மேலிடம் தமிழகம் பக்கம் திரும்பிப்பார்க்கும் நிலையில் இல்லையாம். வட மாநிலங்களில் தேர்தல் விவகாரம்தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறார்கள்.இந்த இடைவெளியில் பன்னீரை சந்தேகமாகப் பார்க்கிறாராம் தமிழிசை.

நிஜமாவே இந்த மனுஷன் பா.ஜ.க. வந்துட்டா, இப்ப இருக்கிற பதவிக்கு ஆப்பு வந்திடுமே என்று அச்சப்படுகிறாராம். அதனால்தான் என்னவோ பன்னீர் விவகாரம் குறித்து கேட்டபோது வாயையே திறக்கவில்லையாம். பன்னீர் நிலைமை பரிதாபம்தான்.