அமெரிக்க வரலாற்றில் ஒரு கருப்பு தினம்... டிரம்புக்கு கடும் எதிர்ப்பு

அமெரிக்காவில் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயலில் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அங்கு நடந்துள்ள வன்முறை உலக நாடுகளை குலுக்கியுள்ளது. இதுகுறித்து பிரபல பதிவர் ஜாக்கி சேகர் எழுதியிருக்கும் பதிவு இது.


பெரியார் சொன்னது போல... எல்லோரும் அமர்ந்து பயணிக்கும் ரயிலில் முதலில் வந்தவன் கால் நீட்டி படுத்துக் கொண்டு சுகமாக பயணிக்கும்போது... அடுத்த ஸ்டேஷனில் ஏறிய கூட்டம்படுத்திருந்தவனை எழுப்பி உட்கார வைத்தால்... கடும் கோபம் கொள்வான் அல்லவா??? 

அப்படித்தான் ஆட்சியதிகாரத்தை தொடர்ந்து பயன்படுத்தியவர்கள்... அந்த சுகத்தை அனுபவித்து அவர்களால் எழுந்து உட்கார முடியாது... யாருக்கும் இடம் கொடுக்காமல் தானே அனுபவிக்க வேண்டுமென்ற ஆத்திரத்தில் அறத்தை அழித்து சட்டங்களையும் பாரம்பரியங்களையும் உடைத்து எந்த இழி நிலைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்...

அமெரிக்காவில் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்வது உச்சபட்ச அராஜகம்.. இதில் என்ன இருக்கிறது என்று வலதுசாரி சிந்தனையாளர்கள் கம்பு சுற்றுவார்கள்... வலதுசாரி சிந்தனை என்பது லூசு கூமுட்டைகளைதான் ஆதரிக்கும்... இந்தியாவிலும் இப்படி விரைவில் நிகழ வாய்ப்பிருக்கிறது... நான் இதனை யதார்த்தமாகவோ பதார்த்தமாகவோ சொல்லவில்லை...

லாபம் வரும் பாரத் பெட்ரோல் நிறுவனத்தை விற்கும் போதும் எந்த எதிர்ப்பும் இல்லை ... ஒரு மாதத்திற்கும் மேலாக போராடும் விவசாயிகளை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத இந்த நாட்டில் ...இந்த இக்கட்டான காலகட்டத்தில் 85 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பதை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கும் இந்த சமுகம்...

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து தோற்றுப் போனாலும்

ஆட்சி மாற்றத்தின் போது வலதுசாரி ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம்...இதுவரை மக்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்... ஆட்சி பிடித்திருக்கிறது என்று தானே அர்த்தம் ... என்று அவர்களுக்கு அவர்களாகவே கற்பித்துக் கொள்ளும் கற்பிதம் காரணமாக...

முறைப்படி அதிபர் வீட்டைவிட்டோ பிரதமர் வீட்டை விட்டோ காலி செய்ய மனது ஏற்றுக் கொள்ளாது...பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பாலா போல கடைசி நிமிடம் வரை குடைச்சல் கொடுப்பதற்கான குறுக்கு வழியில் வெல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டே இருக்கும்...

எளிதில் இவர்களால் பதவியை தூக்கி ஜனநாயக முறைப்படி கொடுக்க இவர்களுக்கு மனம் வரவே வராது... விரைவில் இந்தியாவிலும் இப்படி நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது...

நாங்களே உலகின் பிஸ்தா என்று மார் தட்டிய அமெரிக்க நாடாளுமன்றம் அவமானப்பட்டு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.