வங்கி ஆன்லைன் டிரான்ஸ்சாக்சன் இனி ஃப்ரீ! மோடி அரசு அதிரடி!

வங்கிகளில் 2 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு, கூடுதலான வேலை நேரம் என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பயனாளிகள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது...


இரண்டு லட்சம் வரை பணத்தை வங்கி வேலை நேரங்களில் இணையதளம் மூலம் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யும் RTGS (Real time gross settlement system )முறைக்கான கட்டணம் குறைக்கபடும் எனவும் இதற்கான வங்கியின் வேலை நேரம் காலை 8 முதல் மாலை 4.30 வரை இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அதாவது காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நீட்டித்துள்ளது.

RTGS, NEFT (National electronic fund transfer) உள்ளிட்ட  இணையவழி பணப்பரிமாற்ற சேவைக் கட்டணங்களை நீக்கயது குறித்த தெளிவான விழிப்புணர்வு பயனாளிகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும் எனவும்  வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்திய வங்கிகள் சங்கத்தில் உள்ள வங்கிகளின் தலைமைச் செயலதிகாரிகளைக் கொண்டு ஒரு குழு அமைக்க முடிவெடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இக்குழு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து ஏ.டி.எம் கட்டணங்களை குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து ரிசர்வ் வங்கி ஏ.டி.எம் கட்டணத்தையும் வரைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.