ஆன்லைனில் இலவச யோகா பயிற்சி! ஈஷா சத்குருவின் குரு பூர்ணிமா பரிசு!

இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்களின் சிறப்பு சத்சங்கம் நடைபெற்றது. அதில் சத்குரு பேசியதாவது


15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குரு பெளர்ணமி தினத்தில் தான் உலகின் முதல் குரு தோன்றினார். ஈஷா யோகா மையம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் பல மகத்தான மனிதர்கள் இதற்காக செயல்புரிந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

 உள்நிலை மாற்றத்துக்கான கருவி (யோகா) ஒரு குருவின் கையிலோ அல்லது ஒரு அமைப்பின் கையிலோ இருக்க கூடாது. ஒவ்வொரு மனிதர்களின் கையிலும் இருக்க வேண்டும். அதற்காக தான் நாம் பல செயல்கள் செய்து வருகிறோம். அதன் ஒருபடியாக, ஈஷா யோகா பயிற்சிகளை ஆன்லைன் மூலம் இலவசமாக வழங்க உள்ளோம். முதல்கட்டமாக, தற்போது, ஆங்கிலம், இந்தி மற்றும் ரஷ்ய மொழிகளில் யோகா கற்றுக்கொடுக்க உள்ளோம். கூடிய விரைவில் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளிலும் ஈஷா யோகா வகுப்புகளை நடத்த இருக்கிறோம்.

குறிப்பாக, இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் என பல தரப்பினருக்கும் மிகப் பெரிய அளவில் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்க உள்ளோம். இவ்வாறு சத்குரு பேசினார்.

குரு பெளர்ணமி விழாவில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், இரவு 8 மணி ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ என்ற 3 டி ஒளி, ஒலி காட்சியும் நடைபெற்றது.