மூடிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் ஜோடி! கழுத்தை கோழியை அறுப்பது போல் அறுத்திருந்த கொடூரம்! அதிர வைக்கும் சம்பவம்!

திருவனந்தபுரம்: காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் சமீபகாலமாக, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி, திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியான காரக்கோணம் பகுதியில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞரான அனு என்பவர், ஆஷிகா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

ஆனால், ஆஷிகா அவரிடம் நட்பாக மட்டுமே பேசியிருக்கிறார். நட்பாக பழகியதை காதலாக எடுத்துக் கொண்ட அனு அடிக்கடி தனக்கு தொல்லை தருவதாக ஆஷிகா, தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். பிறகு, இதுபற்றி ஆஷிகா தரப்பில் போலீஸ் புகார் தரப்பட்டது. போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.  

இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனு, காதலியை பழிதீர்க்க திட்டமிட்டார். திங்கள்கிழமையன்று, தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்துக் கொண்டு, நடந்தே நேரடியாக ஆஷிகாவின் வீட்டிற்குச் சென்ற அனு, அவரது கழுத்தை அறுத்துவிட்டாராம். பிறகு உடனடியாக, தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டுவிட்டார்.  

இதனை நேரில் பார்த்து அதிர்ந்துபோன ஆஷிகாவின் பெற்றோர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்சை கூப்பிட மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இருவருமே துடிதுடித்து உயிரிழந்தனர்.