நடுவானில் திடீரென அத்துமீறிய பயணி! விமான பணிப்பெண்ணுக்கு நொடியில் ஏற்பட்ட பயங்கரம்!

டெல்லி: விமானப் பணிப்பெண் முகத்தில் வெந்நீரை ஊற்றிய பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிவது மிகவும் கடினமான வேலை என அடிக்கடி விமானங்களில் நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆம், இந்த வரிசையில் புதியதாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பட்ஜெட் விலையில் சிறப்பான விமான சேவை வழங்கி வரும் ஏர் ஏசியா நிறுவனத்தில் பணிபுரியும் நுராலியா மஸ்லான் என்பவர் Quora இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

விமானப் பணிப்பெண்ணாக பணிபுரியும் அவர், தனது பணிக்காலத்தின் சீன வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க நேரிட்டதாகவும், அவரால் தன்னுடன் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் கடும் பாதிப்பிற்கு ஆளானார் என்றும், இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு எனவும் கூறியுள்ளார். 

அதாவது, ஏர் ஏசியா விமானத்தில் ஒருமுறை நடுவானில் பயணித்தபோது, சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உணவு விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி, உணவின் சூடு தாங்க முடியாத ஆத்திரத்தில் அதனை அப்படியே சக பணிப்பெண் மீது விமான பயணி ஒருவர் கொட்டிவிட்டார். 

அந்த பயணிக்கு ஒரு கப்பில் நூடுல்ஸ் விநியோகிக்கப்பட்டது. ஆனால், அது மிகவும் சூடாக இருந்ததால் அதனை தாங்கிப் பிடிக்க எதுவும் தரும்படி அவர் விமானப் பணிப்பெண்ணிடம் கேட்க, அவரோ மறுத்துவிட்டாராம்.

இதனால், அந்த பயணி சுடச்சுட வெந்நீர் கலந்த நூடுல்ஸ் கப்பை அப்படியே பணிப்பெண்ணின் முகத்தில் கொட்டிவிட்டாராம். ''இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, நேரில் பார்க்க மிக கோரமாக இருந்தது. விமானப் பணிப்பெண் வேலை மிகவும் கடினமான ஒன்று என்பதை நேரில் உணர்ந்தேன்,'' என, அந்த நபர் Quora இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.