சாலையை கடக்க முயன்ற முதியவர்! ஒரு நொடி அவசரத்தால் நேர்ந்த விபரீதம்! பதற வைக்கும் சிசிடிவி!

நாகை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி உயிரிழந்த பதறச் செய்யும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ளது அபிஷேக கட்டளை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். 58 வயதான இவர், தனது ஊரில் உள்ள பிரதான சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அவருக்கு அவசரமாக சாலையைக் கடந்து செல்ல மட்டும் தான் கவனம் இருந்ததே தவிர சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பொருட்டாகத் தெரியவில்லை. 

திடீரென தனபால் சாலையில் இறங்கிய நிலையில் அப்போது அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநருக்கு அந்த அவசரத்தில் பிரேக்கை பிடிக்க அவகாசம் இன்றிப் போனது. இந்நிலையில் முதியவர் மீது மோதிவிட்டுத் தான் லாரி நின்றது. இதில் தூக்கி வீசப்பட்ட தனபால் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனம் அவசியம் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும்  அதையும் மீறி பொறுப்பின்றி நடந்துகொண்டால் என்னநேரும் என்பதற்கு இந்த வீடியோ மற்றுமொரு சாட்சியாகிப் போனது.