நடுரோட்டில் முதியவரை கொடூரமாக தாக்கி வழிப்பறி! 3 இளைஞர்கள் வெறிச் செயல்! கண்டும் காணாமலும் சென்ற மக்கள்! அதிர வைக்கும் சிசிடிவி!

சாலையில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த முதியவரை தாக்கி 3 இளைஞர்கள் அவரிடம் இருந்து செல்போனை பறிக்கும் காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்கச் வைத்ததுடன் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


ஆரணி பகுதியில் நாளுக்கு நாள் வழிப்பறி, திருட்டு, கொள்ளை என சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கடந்த 15ம் தேதி ஆரணி பகுதியில் உள்ள பரபரப்பான சத்தியமூர்த்தி சாலையில் இரவு 10 மணி அளவில் முதியவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூன்று இளைஞர்கள் முதியவரை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து செல்போன்களை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி இணையதளங்களில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டும் காணாமல் செல்வது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் கேட்டபோது, இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. சிசிடிவி காட்சியை நன்கு ஆராய்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.