பெண் பயணி முன்பு சுயஇன்பம்! ஓடும் காரில் ஓலா டிரைவர் அரங்கேற்றிய விபரீதம்!

மும்பையில் ஒலா டாக்சியில் ஒரு பெண் தனியாக பயணம் செய்த போது சுய பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதன் ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கடந்த செவ்வாய்க் கிழமை அந்தப் பெண் தனது டிவிட்டர் பதிவில் தான் ஒலா டாக்சியில் பயணம் செய்தபோது, கார் சிக்னலில் நின்றதாகத் தெரிவித்தார். அப்போது காரின் ஓட்டுநர் முன் கண்ணாடி வழியாக தன்னை உற்றுத்துப் பார்த்ததாகவும், சற்று நேரத்தில் ஓட்டுநரின் இருக்கை தொடர்ந்து அசைவு இருந்ததாகவும், தெரிவித்துள்ளார்.

இதனால் தான் சந்தேகப்பட்டு தான் எட்டிப் பார்த்த போது ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஓட்டுநர் சுய பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ள அந்தப் பெண் அச்சம் மற்றும் அவமான உணர்வில் இருந்து வெளிவர தனக்கு 24 மணி நேரம் தேவைப்பட்டதாகக் கூறியுள்ளார். 

இது குறித்து தெரிவித்துள்ள ஓலா செய்தித் தொடர்பாளர் தாங்கள் ஓட்டுநரின் நடத்தையை கடுமையாக கண்டிப்பதாகவும், தொடர்புடைய பெண்ணிடம் புகாரைப் பெற்றபின் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தங்களது பாதுகாப்பு உறுதிக் குழு அந்தப் பெண்ணுடன்  தொடர்பில் இருப்பதாகவும், தேவையான உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இதனிடையே அந்தப் பெண்ணின் டிவிட்டர் பதிவை பார்த்த் மும்பை போலீசார் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து விரைவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.