இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

உலக அளவில் நம்பர் ஒன் வல்லரசு நாடாக நம் இந்தியா வளரவேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே உண்டு. இப்போது இந்தியா நம்பர் ஒன் நாடாக வந்துள்ளது... ஆனால் வல்லரசாக அல்ல. உலக அளவில் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி உள்ளவர்கள் எண்ணிக்கையில் இந்தியாதான் நம்பர் ஒன் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.


இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்களும் சீனாவில் 43.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மேற்கொண்டால் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட  முடியும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளான பிறகு கண்டுபிடிக்கப்படுவதே பெரும் சிக்கலுக்குக் காரணமாகிறது.

நடைபயிற்சிபோதிய தண்ணீர்கொழுப்பு குறைவான சரிவிகித உணவுஎடை கண்காணிப்பு போன்றவற்றை கடைபிடித்தாலே நீரிழிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.