வீட்டை காலி செய்ய நல்லகண்ணுவுக்கு நோட்டீஸ்! முதுபெரும் தலைவருக்கு நேர்ந்த பரிதாபம்!

சென்னையில் உள்ள ஹவுசிங் போர்ட் வீட்டில் வசித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வீட்டை காலி காலி செய்யுமாறு தமிழக அரசு அனுப்பியுள்ள நோட்டீஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை தியாகராயநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு அவர்களை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு அவரும் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கிறார்.

94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு பழ நெடுமாறன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.