பெற்ற தாய்க்கு உதவ 60 வயது பெண்மணி போல் வேடம் போட்ட இளம் மகன்! ஆனால் அதிகாரிகளிடம் சிக்கியதால் ஏற்பட்ட பரிதாபம்! அதிர்ச்சி காரணம்!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற திருக்குறளின் அர்த்தத்தை தாறுமாறாக புரிந்து கொண்ட மகன் ஒருவர் தாய்க்காக சட்ட விரோத செயல் செய்து சிறைக்கு சென்றுள்ளார்.


வடக்கு பிரேசில் போர்டோ பகுதியை சேர்ந்த 60 வயதான மரியா என்ற மூதாட்டி வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் கிடைக்கவில்லை. அதற்காக அவர் நடத்தப்பட்ட தேர்வில் 3 முறை தோல்வி அடைந்ததால் அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவில்லை. வயதானதாலும், கண் பார்வை மங்கியதாலும் சாலையில் சரியாக வாகனத்தை ஓட்டிக் காண்பிக்க முடியவில் எனக் கூறப்படுகிறது. 

இதற்கியே அவரது மகன் எப்படியாவது ஓட்டுநர் உரிமம் வாங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்தார். நம்மூராக இருந்தால் சில, பல நோட்டுகளை காண்பித்து உரிமம் வாங்கியிருக்கலாம். ஆனால் அங்கு அதிக கெடுபிடி என்பதால் லஞ்சத்திற்கு இடம் இல்லை. அதற்கு காரணம் சாலையில் செல்லும் மற்றவர்களையும் கவனத்தில் கொள்கிறார்கள் அவர்கள். 

எனவே மரியாவின் மகன் 43 வயதான ஹீட்டர் ஷியாவே, தன்னுடைய தாயை போலவே உடை அணிந்து கொண்டார். அலங்காரங்கள் செய்து கொண்டார். இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் முன் வாகனத்தை ஓட்டிக் காண்பித்தார். அப்போது அவருடைய கை நீளமாகவும், குரல் கரகரவென இருப்பதை கவனித்துவிட்ட பெண் அதிகாரி, அடையாள அட்டை மீண்டும் பரிசோதித்துள்ளார். அப்போதுதான் ஆள்மாறாட்டம் நடந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்ற செய்தியெல்லாம் பழசு . இது புதுசு.