தமிழகத்தில் குடிநீர் பஞ்சமே இல்லை..! நல்ல மழை பொழிகிறது எடப்பாடியார் ஆட்சியில்!

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் இல்லாமல் எல்லா இடங்களிலும் நல்ல மழை பொழிவு நிலவுகிறது.


கொரோனா நோயை கட்டுப்படுத்துவதிலும் தமிழகம் முன்னேறி நிற்கிறது. இதுகுறித்து இன்று சேலத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

பருவமழை ஓரளவு நன்றாக பொழிந்துள்ள காரணத்தினால், மாநகராட்சி உட்பட, மாவட்டம் முழுவதும் குடிநீர்ப் பிரச்சனை இல்லாமல் முறையாக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தொய்வில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. தொழிற்சாலைகள் 100 சதவிகிதம் இயங்கி வருகின்றன. வேளாண் பணிகள் 100 சதவிகிதம் நடைபெற்று வருகிறது. 100 நாள் வேலை திட்டம் எவ்விதத் தடையுமில்லாமல் அரசு அனுமதியளித்த காலத்திலிருந்து தற்போதுவரை 100 சதவிகித பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது. 

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற பேரவையில், விதி 110ன் கீழ், முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தேன்.

முதற்கட்டமாக, அத்திட்டத்தினை சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கி, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நானே நேரில் சென்று, மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் பொதுமக்களை சந்தித்து, மனுக்களைப் பெற்றேன். அதில் தகுதியான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 

உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளின் அடிப்படையில், அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியிருக்கிறது. சேலம் மாவட்டத்தில், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குவதன் காரணமாக நோய்ப் பரவல் குறையத் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.