இடுப்புக்கு மேல் பேரழகி..! இடுப்புக்கு கீழ்..? இளம் பெண்ணை ஆட்டிப் படைக்கும் புது நோய்..! பதற வைக்கும் புகைப்படம்!

லண்டன்: கால்கள், தொடை வீங்கிய நிலையில், உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் லண்டன் பெண் அவதிப்படுகிறார்.


ஹட்டர்ஸ்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த மிஸ் ஓல்ட்ஃபீல்ட் எனும் 36 வயது பெண், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அழகுப் பெண்ணாக  வலம் வந்தார். இந்நிலையில், அவரது தொடை, கால்கள், பாதம் உள்ளிட்டவற்றில் கொழுப்பு அதிகளவில் சேர தொடங்கியதால், அந்த இடங்கள் அளவுக்கு அதிகமாக, வீங்க தொடங்கியுள்ளன.

இது நாளுக்கு நாள் வளர்ந்து கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. இடுப்புக்கு மேலே இயல்பாகக் காட்சியளிக்கும் ஓல்ட்ஃபீல்ட் இடுப்புக்கு கீழே தொள தொள சதை வளர்ச்சியுடன் மிக அசவுகரியமான நிலையில் காணப்படுகிறார். இவரால் 5 நிமிடங்களுக்கு மேல் எங்கேயும் நடந்து செல்லவோ, நிற்கவோ முடியாது. இதனால், வீட்டிலேயே எந்நேரமும் படுத்தே கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  

தனக்கு நேர்ந்த பாதிப்பு பற்றி மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றாலும், இதனை எப்படி கட்டுப்படுத்துவது, இதற்கான மூல காரணம் என்ன என்று தெரியவில்லை எனக் கூறி, சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மருத்துவிட்டதாக, ஓல்ட்ஃபீல்ட் வேதனையுடன் கூறுகிறார்.  

இந்த விபரீத உடல் பாதிப்பால், இதுவரை செய்து வந்த அலுவலக வேலையையும் ராஜினாமா செய்துவிட்டதாகவும், எதிர்காலம் என்னாகும் எனத் தெரியவில்லை என்று, கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார் ஓல்ட்ஃபீல்ட்.