எவ்வளவு கவர்ச்சி காட்டியும் பட வாய்ப்புகள் இல்லையே? சோகத்தில் போதைக்கு அடிமையான முன்னணி நடிகை!

சென்னை: கிளாமரில் இறங்கியும் வாய்ப்பு கிடைக்கலியே, என்ற வருத்தத்தில் அந்த திறமையான நடிகை உள்ளாராம்.


ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருவோருக்கு வயது ஆக ஆக வாய்ப்புகள் குறைவது வழக்கம். அதைப் புரிந்துகொண்டு சிலர் அப்படியே நடிப்பதில் இருந்து விலகிவிடுவார்கள், ஒரு சிலரோ, அதற்குப் பிறகும் கவர்ச்சி வேடங்களில் நடித்து வாய்ப்பை தக்க வைக்க முயற்சிப்பார்கள்.  

அப்படித்தான் இந்த நடிகையும் வேதனையில் உள்ளார். ஆக்‌ஷன் நடிகரின் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர், தமிழில் சில குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். அதில் சில படங்களின் கதைக்களம் பீரியட் காலக்கட்டத்தில்  நடப்பதாக இருந்தது. அதிலும் ஹீரோயின் நல்ல முறையில் நடித்து பரவலான பாராட்டுகளை பெற்றார். நடிப்பிற்கு பாராட்டு பெற்றாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால், தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார். அதிலும் கூட பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. எனவே, திரும்பி தமிழுக்கே வந்தவர்,  சில படங்களில் கவர்ச்சி அதிகம் காட்டி நடித்தார். வாய்ப்பில்லை ராஜா என்றே தகவல் வர, பிறகு, கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி படங்களை நெட்டில் பரவ விட்டார். அப்போதும் பலன் இல்லை.  

வருத்தத்தில் கோயில் கோயிலாக ரவுண்ட் அடித்தவருக்கு, கடைசியாக ஒரே ஒரு படம் மட்டும் கிடைத்துள்ளது. அதிலும் பெரிய அளவில் திருப்தி இல்லை என்பதால் அந்த நடிகை படிப்படியாக மதுவுக்கு அடிமையாக தொடங்கியுள்ளாராம். சினிமா ஒரு மாயை என்பது இந்த நடிகைக்கு பொருந்தும் என்று பார்ப்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.