திருமாவளவனுக்கு அடுத்த ஆப்பு! திருச்சி ரெய்டுக்குக் காரணம் இது தானாம்! பரபரப்பு தகவல்!

தி.மு.க. வேட்பாளர்களை மட்டுமே குறிவைத்து ரெய்டு நடத்தப்படுவதாக ஸ்டாலின் புகார் சொல்லிவருவதை அடுத்து, அவரது கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் இப்போது குறிவைக்கப் பட்டுள்ளது.


இதற்கு காரணம், வருமான வரித்துறை ரெய்டு என்பது ஒழிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்திருந்தார். அதனால் கோபமான வருமான வரித்துறையினர் வேகம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனாலே விடுதலை சிறுத்தைகள் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி மாநில துணை செயலாளர் ராஜா மற்றும் அவரின் சகோதரரும் வி.சி.க வின் அச்சு ஊடக பிரிவு மாநில துணை செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோருக்கு சொந்தமான எல்ஃபின் என்கிற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் எல்பின் இ.காம் தனியார் நிறுவனமானது ரியல் எஸ்டேட், ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்வது, பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறது.

 இந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் 15 லட்சம் மோசடி செய்ததாக கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில்  மார்ச் 4 ஆம் தேதி திருச்சி மன்னார்புரத்திலுள்ள அந்நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இந்நிலையில் அதே நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் 10 அதிகாரிகள் எல்ஃபின் நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து திருமாவின் தொகுதிகளுக்கு பணம் கொண்டுசெல்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தேர்தலில் நிற்பது சிக்கலாக வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. எப்படியோ இந்த விஷயத்திலாவது தி.மு.க.வும் விடுதலை சிறுத்தைகளும் ஒண்ணா வேலை செஞ்ச்சா சரிதான்.