குழந்தையை பிரசவிக்கும் இடமா அது? கலெக்டர் ஆபிஸ் கழிப்பறையில் நிகழ்ந்த விபரீதம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கழிப்பறையில் பிறந்து சில நேரமே ஆன பச்சிளம் குழந்தையை துணியில் சுற்றி கழிவறையில் வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம்  ஆட்சியர் அலுவலகத்தில் பிறந்து சில மணி நேரமே ஆனால் பெண் குழந்தை ஒன்று கழிவறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கழிவறைகள் கட்ட வேலை தொடங்கியுள்ளது.இந்நிலையில் வேலை ஆட்கள் அதிக பேர் அங்கு இருந்துள்ளனர்,அப்போது பழைய கழிவறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் குழந்தையின் அழுகுரல் கேட்ட திசை நோக்கி சென்று பார்த்தபோது அங்கு பச்சிளம் குழந்தை ஒரு துணியில் சுற்றப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

பின்னர் இது குறித்து அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அக்குழந்தையை எடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர் பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் பெண் குழந்தையை மீட்டு இந்தக் குழந்தை யாருடையது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் அக்குழந்தை தற்போது திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்குள் பச்சிளம் குழந்தையைக் கொண்டு வந்து கழிவறையில் வீசிய சென்றது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.