வந்துவிட்டது கரப்பான் பூச்சி சவால்! உலகம் முழுவதும் வைரல்! அப்டினா என்ன தெரியுமா?

கிக்கி, ஐஸ் பக்கெட் சவாலை தொடர்ந்து கரப்பான்பூச்சி சவால் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.


கார் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென காரை விட்டு இறங்கி ஒருவர் நடனமாடுவார். கேட்டால் அது கிக்கி சவால் என்று கூறுவார். அதேபோல் ஐஸ் கட்டிகள் நிறைய உள்ள பக்கெட் நீரை தலையில் ஊற்றிக் கொண்டு அது ஐஸ் பக்கெட் சவால் என்று கூறுவோரும் உள்ளனர். இந்த இரு வினோத சவால்களும் உலகெங்கிலும் பரவிக்கிடக்கின்றன. இந்த நிலையில் தற்போது புதியதாக சவால் ஒன்று தோன்றியுள்ளது. அதற்குப் பெயர் கரப்பான்பூச்சி சவால்.

பொதுவாக கரப்பான் பூச்சி என்றாலே அனைவருக்கும் பயம் தான். குறிப்பாக பெண்களுக்கு.. அலெக்ஸ் ஆங் என்ற பேஸ்புக் மைனர் தான் இந்த சவாலை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி தனது முகத்தில் கரப்பான்பூச்சியை ஊர விட்டபடி அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவேற்றம் செய்துள்ளதுடன்

இது போல் யாராவது செய்ய முடியுமா என்றும் சவால் விடுத்துள்ளார். இந்தப் புகைப்படமானது 18000 தடவை பகிரப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட கருத்துக்கள் குவிந்துள்ளன. தற்போது பலரும் கரப்பான்பூச்சி சவாலை மிகவும் ஆர்வத்துடன் கையாண்டு பேஸ்புக்கில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.