திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன்! ஆசை மனைவி கண் முன்னே காதல் கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்! அதிர வைக்கும் சம்பவம்!

கேரளாவில் தேனிலவுக்கு மனைவியுடன் படகில் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


திருவனந்தபுரம் அடுத்த கரையாவட்டம் பகுதியை சேர்ந்த குமார் – சதிகுமாரி தம்பதிக்கு ரஞ்சித் என்ற மகன் உள்ளார். அவருக்கும் ஸ்ரீதேவி என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இதையடுத்து தேனிலவை கொண்டாட புது மணத் தம்பதி உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் உறவினர்கள் சிலரும் சென்றுள்ளனர். அங்குள்ள சுற்றுலா தளம் ஒன்றில் புதுமண தம்பதி உறவினர்களுடன் படகு சவாரி செய்துள்ளனர்.

ஆற்றில் சென்று கொண்டு இருந்த படகு எதிர்பாராத விதமாக ஒரு பாறை மீது மோதி ஆற்றில் மூழ்கத் தொடங்கியது. இதில் புது மாப்பிள்ளை ரஞ்சித் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது மனைவி ஸ்ரீதேவி மற்றும் உறவினர்கள் என 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

திருமணம் ஆன சில நாளிலேயே ஸ்ரீதேவி கணவரை இழந்து வாழ்க்கையை தொலைத்ததை அடுத்து உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பெரும்பாலும் படகு விபத்துகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாரத்தை ஏற்றுவதால்தான் நடைபெறுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஒரே படகில் செல்ல வேண்டும் என என ஆசைப்பட்டு படகோட்டி பேச்சையும் கேட்காமல் செல்வதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகிறது. பிறருக்கு நிகழும் அசம்பாவிதங்களை அனுபவங்களாக கருதி எச்சரிக்கையுடன் இருக்காமல் தனக்கு ஏற்பட்டதை அனுபவமாக கருதுவது ஏன்?