இனி ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை பார்க்கணம்..! விரைவில் வருகிறது புதிய தொழிலாளர் சட்டம்!

ஊழியர்களுக்கு நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதிய தொகையில் இருந்து 28 சதவீதம் வரை உயர்வு கொடுக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


அண்மையில் பாராளுமன்றத்தில் ஊதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, நாடு முழுவதும் இருக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய தொகையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும் வகையில் வழிவகை செய்கிறது. 

இந்த மசோதாவின் அடிப்படையில், ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச தொகையில் இருந்து சுமார் 28 சதவீதம் வரை உயர்வு கொடுக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.  

அதாவது நாளொன்றுக்கு 100 ரூபாய் பெற்றிருந்தவர்கள், இனி 120 முதல் 130 வரை பெரும் அளவிற்கு உயர்வு கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. *9+அதேபோல், ஊழியரின் குடும்பத்திற்கு உணவு, கல்வி, வாடகை, 66 மீட்டர் துணி, எரிபொருள், மருத்துவ செலவு ஆகியவை இந்த ஊதியத்தின் 25 சதவீதத்தில் அடங்கும். 

எந்த ஒரு மாநில அமைப்போ, நிறுவனமோ, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க முடியாது என்றும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், வேலை நேரம் 9 மணி நேரமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.