அகோரிகள் அதிகரிப்பால் உள்ளாடை விற்பனை மந்தம்! நிர்மலா சீதாராமனை புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்!

ஊபர், ஓலா போன்ற சேவையை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதுதான் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேசியதுதான் இப்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.


நெட்டிஷன்கள் நிர்மலா சீதாராமனை ஓவராக கலாய்க்கத் தொடங்கிவிட்டார்கள். பொருளாதார வீழ்ச்சிக்கு இன்னும் என்னவெல்லாம் காரணமாக சொல்லலாம் என்று நிர்மலா சீதாராமனுக்கு ஐடியாக்களை அள்ளி வழங்கி வருகிறார்கள். சில சேம்பிள்கள் மட்டும் இங்கே.

* நாட்டில் அகோரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தான், உள்ளாடை உற்பத்தியும் விற்பனையும் குறைவாக இருக்கிறது. 

* பீட்சா விற்பனை அதிகரித்த காரணத்தால்தான், நாட்டில் விவசாய உற்பத்தி குறைந்து போயிருக்கிறது.

* இப்போது புவியீர்ப்பு விசை இருப்பதன் காரணமாகத்தான் இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது பொருளாதார சீர்குலைவு அல்ல.

* இந்தியர்கள் வேலைக்குச் செல்ல விரும்பாத காரணத்தால்தான், வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* அரசு ஊழியர்களுக்கு கட்டாய கார் வழங்குவதற்கு அரசு முடிவு எடுத்துள்ளது. சம்பளத்தில் இருந்து தவணை தொகை பிடிக்கப்படும். மறுப்பு தெரிவிப்பவர்கள் ஆன்டி இந்தியன் என்று முடிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

முன்னரே ஹோட்டலுக்கு ஜி.எஸ்.டி. அதிகம் என்று கேள்வி எழுப்பப்பட்ட நேரத்தில், அப்படின்னா வீட்டுலேயே சமைச்சு சாப்பிடுங்க என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னவர் நிர்மலா சீதாராமன் என்பதை மறந்துவிட முடியாது.

தமிழ்த்தாயே வணக்கம்.