நயன்தாராவின் புதிய ஆசை! விக்னேஷ் சிவன் தலையில் ஜோதிடர் போட்ட குண்டு!

பொதுவாகவே கேரள பெண்களுக்கு தமிழ் சினிமாவில் மவுசு அதிகம் என்றே கூறலாம்.


அந்த வகையில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். இவரது இயற் பெயர் டயானா மரியா குரியன் ஆகும். 2003-ம் ஆண்டு "மனசினகாரே" என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா 2005-ம் ஆண்டு "ஐயா" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.  "ஐயா" திரைப்படத்தின் இயக்குனர் "ஹரி" தான் இவரது பெயரை நயன்தாரா என்று மாற்றினார்.

இவர் தற்போது ரூ .5கோடி  வரை சம்பளமாகா பெறுகிறார். இவர் தமிழ் சினிமாவில் 2010 -இல் இருந்து  இன்று வரை  "லேடி சூப்பர் ஸ்டார்"  என்று கருதப்படுகிறார். ஏனென்றால் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக இவர் கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார். 

சொல்லப்போனால் இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே கிடையாது என்றே கூறலாம்.  சூப்பர் ஸ்டார் முதல் தொடங்கி தல, தளபதி என்று இவர் நடித்த நடிகர்களின் பெயரை பட்டியலிட்டு கொண்டே போகலாம். நயன்தாராவுக்கு இரண்டு விதமான குணங்கள் உண்டு. ஒன்று தனக்கு சரி வரவில்லை என்றால் எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்கமாட்டார் என்பது. இதற்கு சான்றாக "இது நம்ம ஆளு" திரைப்படத்தில் எழுந்த பிரச்சனையால் பாடல் காட்சியை நடிக்க மறுத்துவிட்டார். 

இதற்காக தயாரிப்பாளர் தர வேண்டிய ரு.35 லட்சம்  கூட எனக்கு தேவை இல்லை என்று கட் அன் ரைட் ஆக கூறிவிட்டாராம். மற்றொரு குணம் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை ஆகும்.  இதற்கு சான்றாக, ஐயா திரைப்படத்தில் தன்னுடைய உதவியாளராக இருந்து வந்த ஒருவருக்கு தன்னுடைய சொந்த பணமான 1 கோடியை செலவு செய்து ஒரு வீடு வாங்கி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய குணங்கள் நிறைந்த நயன்தாராவிற்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளது இவர் எப்போதும் எந்த காரியத்தை தொடங்கும் முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு ஜோதிடரை சந்தித்து ஆலோசனை பெற்று கொள்வார்.  அந்த ஜோதிடர் கணித்துச் சொன்ன பல விஷயங்கள் பலிக்கவே, ஒவ்வொரு முறையும் தவறாமல் அவரது ஆலோசனையைப் பெற்று வருகிறார்.

தற்போது இவருக்கு அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை பற்றி ஜோதிடர் இடம் கேட்ட போது,ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த ஜோதிடர், `அரசியலில் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது' என்றிருக்கிறார். ஆனால் இதற்கான நல்ல நேரம் இன்னும் கூடி  வர வில்லை என்றும் அது வரும் போது நானே கூறு கிறேன் என்றும் கூறியுள்ளாராம்.

ஆகவே ஜோதிடர் எப்போது பச்சை சிக்னல் காட்டுவார் என்று அரசியல் குதிக்க ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறார்  நயன்தாரா!