மக்களே… தீபாவளியை சிறப்பா கொண்டாடுங்க..! அள்ளிக்கொடுக்கும் நரேந்திர மோடி. சீனா போரை மறந்துட்டாரே.

இந்திய பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசுகிறார் என்றாலே, மக்கள் பயந்து நடுங்கிய காலம் போயேபோச்சு. அவ்வப்போது தொலைக்காட்சியில் தோன்றி, அரை மணி நேரம் அவரது ஆட்சியின் அருமை பெருமைகளை அவரே சொல்லிக்கொண்டு விடைபெற்று விடுகிறார்.


அதேபோல் இன்றும் மக்களிடம் தொலைக்காட்சியில் பேசினார் நரேந்திர மோடி. அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளை மக்கள் சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக நவம்பர் வரை ஏழைகளுக்கான தானிய விநியோகம் நீட்டிக்கப்படுகிறது. 

பிரதமர் ஏழை நலத் திட்டத்தின்கீழ் 1.75 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் 20 கோடி ஏழைக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் 31 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது. அதைப்போலவே 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.

பிற நாடுகளை ஒப்பிடும்போது நாம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முன்னோடியாக இருக்கின்றோம் இப்போது செய்யக்கூடிய சிறு தவறுகள் கூட பெரிய இழப்புகளை கொண்டுவரலாம் பல இடங்களில் பொதுவாக பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். 

ஊரடங்கு தளர்வு நேரத்தில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்; விதிகளை மீறுவோரை அதிகம் எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய சூழ்நிலையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது கட்டுப்பாடுகள் மூலம் பல லட்சம் ரூபாய்களை நாம் மிச்சப்படுத்தி உள்ளோம் கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் 

அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்ட. இது 130 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கையாகும். ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை

ஒரு பொது இடத்தில் முககவசம் அணியாததற்காக ஒரு நாட்டில் 13,000 ரூபாய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்றுமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கு ஆலோசனை கூறி அலற வைத்துள்ளார் மோடி. சீனாவுடன் போர் நடக்குமா, என்ன நிலவரம் என்பதை மோடி மறந்தும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.