முதலில் பேராசிரியர்! பிறகு மாணவர்! நாமக்கல் பேராசிரியையின் தகாத வீடியோ வைரல்! அதிர வைத்த சம்பவம்!

பேராசிரியரும், பேராசிரியையும் கள்ளக்காதலில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து மாணவர் மிரட்டிவந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


தான் செய்யும் தவறுகள் யாருக்கும் தெரியாது என நினைத்து முறையற்ற வாழ்வு வாழும் பலருக்கு செல்போன் எமனாக இருக்கிறது என்பது கல்லூரி பேராசிரியர்களுக்கு கூட தெரியாமல் போகிறது. 

காதலிப்பது போல் நடிப்பது, அத்துமீறுவது, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதிப்பது ஒரு தொழிலாகவே போய்விட்டது. இது குறித்த பல செய்திகள் வந்தாலும் மற்றவர்களை போல் நாம் ஏமாற மாட்டோம் என நினைத்துக்கொண்டே ஏமாந்துவிடுகின்றனர். பின்னர் சமூகத்திற்கும் பெற்றோருக்கும் பயந்து தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொல்லமுடியாமல் நாள்தோறும் செத்து செத்து பிழைக்கின்றனர்.

நாமக்கலில் தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார் அதே கல்லூரி பேராசிரியர். பின்னர் நெருங்கிப் பழகும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து கொண்டுள்ளார். மேலும் பேராசிரியையிடம் தகாத முறையில் வாட்ஸ்-ஆப் வீடியோ கால் பேசி, அதையும் ரகசியமாக செல்போனில் செய்துகொண்டார்.

இதை தான் மட்டும் வைத்துக்கொள்ளாமல் பின்னால் வரப்போகும் வில்லங்கத்தை உணராமல் மாணவர் ஒருவரிடம் காண்பித்துள்ளார். பின்னர் அந்தமாணவர் அந்த வீடியோவை அவருடைய செல்போனில் ஏற்றிக்கொண்டுள்ளார். பின்னர் இதை வைத்து தனது பேராசிரியையை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதுகுறித்து பேராசிரியை தரப்பு போலீசில் புகார் அளிக்க மாணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.