45 அங்குலம்..! 18 கிலோ..! பெண்ணின் வயிற்றுக்குள் பிரமாண்ட கட்டி! சோதித்து பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

வார்தா: பெண்ணின் கருப்பையில் இருந்து தர்பூசணி அளவுக்கு மிகப்பெரிய கட்டியை டாக்டர்கள் அகற்றி சாதித்துள்ளனர்.


நாக்பூரை அடுத்த வார்தாவில் உள்ள ஆச்சார்யா வினோபா பாவே ஹாஸ்பிடலில், கவிதா கலாம்  என்ற பெண் சமீபத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் கடும் வலி இருந்ததன் பேரில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது கருப்பையில் சுமார் 106 செ.மீ அளவுக்கு ஒரு மிகப்பெரிய கட்டி இருந்ததை கண்டுபிடித்தனர்.

இது புற்றுநோய் சார்ந்தது அல்ல, serous cystadenoma எனும் இந்த கட்டி முழுக்க முழுக்க நீரால் நிரம்பியதாகும். பார்ப்பதற்கு தர்பூசணி போல மிகப்பெரியதாகக் காட்சியளித்த கட்டியை டாக்டர்கள் போராடி வெளியே எடுத்தனர். இதுபற்றி அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அர்பிதா ஜெய்ஸ்வால் சிங்கம் கூறுகையில், ''என் வாழ்விலேயே நான் பார்த்த மிகப்பெரிய கட்டி இதுதான்.

இதனை வெளியே எடுப்பதற்காக நோயாளியின் வயிற்றில் 95 செமீ அளவுக்கு கிழிக்க நேரிட்டது. மிகவும் போராடி 106 செமீ அளவுக்கு இந்த கட்டியை அகற்றியுள்ளோம். நல்லவேளையாக இது புற்றுநோய் சார்ந்தது கிடையாது. இதனை அகற்றுவதற்கு பொதுவான மயக்க மருந்ததைவிட நிறைய மயக்க ஊசிகளை நோயாளிக்குச் செலுத்த நேரிட்டது,'' என்றார்.