அப்படியே கழன்று விழுந்த மிடில் பர்த்..! லோயர் பெர்த்தில் படுத்திருந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்! எக்ஸ்பிரஸ் ரயிலின் S10 பெட்டியில் பகீர் சம்பவம்!

ஓடும் ரயிலில் மிடில் பர்த் கழண்டு விழுந்ததில் முதியவருக்கு காயம் ஏற்பட்டது. பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் விரைவு ரயில் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. அதில் கீழ் பர்த்தில் பயணம் செய்துகொண்டு இருந்த தர்மராஜ் என்ற பயணி மீது திடீரென மிடில் பர்த் கழண்டு விழுந்தது. இதனால் தர்மராஜ் காயமடைந்தார். இது சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரயிலில் இவருக்கு முதலுதவி செய்யவும் ஒருவர் இல்லை. இது குறித்து டிடிஈ இடம் புகார் அளிக்கப்பட்டது. சில மணி நேரங்களில் மதுரை ரயில் நிலையத்தில் தர்மராஜ் முதலுதவி அளிக்கப்பட்டது. அவரது இருக்கையும் சரி செய்யப்பட்டது. இதன் காரணமாக, ரயில் அரைமணி நேரம் காலதாமதமாக சென்றது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன் ஜன்னல் பிடிமானம் கழண்டு விழுந்ததில் ஒரு பெண் பயணியின் விரல்கள் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முறையான பராமரிப்பை ரயில் பெட்டிகளில் செய்வதில்லை என புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.