அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் தவித்த கூலித் தொழிலாளிக்கு பணம் கொடுத்து உதவிய நம்பியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரம் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
தொழிலாளி கொடூர கொலை! உடலை அடக்கம் செய்ய பணம் இல்லை! தவித்த பிள்ளைகள்! டிஎஸ்பி செய்த நெகிழ்ச்சி செயல்!
நாகை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியம் பள்ளியைச் சேர்ந்த உப்பளத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி செந்தில் என்பவர் ஓரிரு தினங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக அவரது சகோதரரான ரவி என்பவரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
செந்திலின் உடல் இன்று பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செந்திலுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வேறு யாரும் இல்லை. சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அவர்களிடம் பணம் இல்லை. ஆனால் கூலித்தொழிலாளி என்பதால் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.
இந்த நிலையில், அப்போது அந்த இடத்திற்கு வந்த வேதாரண்யம் பகுதியின் துணைக்காவல் கண்காணிப்பாளர் சபிபுல்லா, இவர்களுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். இதனை அருகில் இருந்த நபர் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
பொதுவாக காவல்துறையினர் பொதுமக்களிடம் பணம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் என்ற கருத்து நிலவிவரும் நிலையில், காவல் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் பணம் கொடுத்து உதவியது அனைவராலும் கவரப்பட்டது பாராட்டப்பட்டும் வருகிறது.