முஸ்லீம் ஆணுடன் ஹோட்டல் ரூமுக்கு சென்ற இந்து பெண்! தடுத்து நிறுத்திய ஊழியர்கள்! அதிர்ச்சி காரணம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வெவ்வேறு மதத்தை சேர்ந்த ஆண், பெண் ஒரே அறையில் தங்க ஓட்டல் நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்த, 31 வயதான உதவி பேராசிரியர், தன் தோழியுடன் ஜெய்ப்பூர் வந்திருந்தார். அங்கு சில்வர் கீ எனும் ஓட்டலில் தங்குவதற்கு மொபைலில 'ஒயோ' என்ற செயலி மூலம் முன்பதிவு செய்திருந்தார். பின்னர் சில்வர் கீ ஓட்டலுக்கு வந்த பேராசிரியர் அறையில் தங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, அவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்றும், தனது தோழி, ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

அந்த விண்ணப்பத்தை பார்த்த சில்வர் கீ ஓட்டல் நிர்வாகம் அர்கள் தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்து விட்டது. காரணம் கேட்டபோது, 'வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக அறையில் தங்க, அனுமதிக்க கூடாது' என, உள்ளூர் போலீசார் உத்தரவிட்டுள்ளதாக, ஓட்டல் மேலாளர் தெரிவித்தார்.

இதை எழுத்துப்பூர்வமாக எழுதி தருமாறு பேராசிரியர் கேட்டதற்கு அப்படி தர ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என, ஒயோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஓட்டலில் தங்க வந்த விருந்தினர்களிடம், மன்னிப்பும் கோரி உள்ளது. பொதுவாக திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்குவதற்கு ஓட்டல்களில் அனுமதிப்பது இல்லை. அதற்கு காரணம் பாலியல் ரீதியாக ஏதாவது பிரச்சனை வரும் என்பதால்தான். இந்நிலையில் முஸ்லீம் பேராசிரியருக்கும், இந்து பெண்ணுக்கும் ஓட்டல் அறையில் எதற்காக தங்கவேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் எழத்தானே செய்யும்.