ராமதாஸை விரட்டும் முரசொலி..! சம்மன் வந்தாச்சு..!

முரசொலிக்கு மூலப்பத்திரம் கேட்டு ராமதாஸ் தி.மு.க.வினரை வம்பிழுத்துக்கொண்டே இருந்தார். இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.


 உடனே தி.மு.க.வினர் தெனாவெட்டாக, ‘பத்திரப்பதிவு அலுவலகம் உங்கள் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது, நீங்களே கண்டுபிடியுங்கள்‘ என்று சவால் விட்டது. இந்த விவகாரத்தில் தி.மு.க. தப்பவே முடியாது என்று ராமதாஸ் சொல்லிவந்த நிலையில், அவருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், முரசொலி குறித்த டிவிட்டர் பதிவுகளை ராமதாஸ் 48 மணி நேரத்தில் நீக்கிவிட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

ஆனால், ராமதாஸ் அப்படி எதுவும் செய்யவில்லை. அதனால், ராமதாஸ் மீது தி.மு.க. சார்பில் எக்மோர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முரசொலி ஆவணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மார்ச் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஆஜராவாரா டாக்டர் அல்லது உடல் சரியில்லை என்று ஸ்ட்ரெக்சரில் படுப்பாரோ தெரியலையே..