அடுத்தடுத்து கொல்லப்பட்ட 3 அழகிய குழந்தைகள்! பெற்ற தாய் செய்த கொடூர காரியம்! பதற வைக்கும் காரணம்!

மும்பை: மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அக்ரம் பகவான். பழக்கடை நடத்தி வரும் இவருக்கு பாத்திமா (28) என்ற மனைவியும், பக்பன், சோபா என்ற மகள்களும் ஜியான் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் வியாபாரம் சரிவர நடக்காத காரணத்தால், கணவன், மனைவிக்கு இடையே கடந்த  சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், அக்ரம் பகவான் வெளியூர் சென்ற நிலையில், 3 நாட்களாக பாத்திமாவை காணவில்லை எனக் கூறப்படுகிறது. 

அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம்  வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாத்திமா ஒரு கயிற்றிலும், மூன்று குழந்தைகளும் தனித்தனி கயிற்றிலும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளனர்.

சடலம் அழுக தொடங்கியதால் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.