ரிசர்வேசன்ல டாக்டருக்கு படிக்க வந்தவ தான நீ! சீனியர்களின் ஒரே கேள்வி! தலித் மாணவி எடுத்த விபரீத முடிவு!

ஜாதி பெயரை சொல்லி அடிக்கடி சீனியர்கள் கேலி செய்ததால், மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


எம்பிபிஎஸ் படித்து டாக்டரான பாயல் தாத்வி (22 வயது) நேஷனல் மெடிக்கல் கல்லூரியில் கடந்த  2018ம் ஆண்டு மே 1ம் தேதி, எம்டி படிப்பில் சேர்ந்தார். ஆனால், அவர் சேர்ந்த நாள் முதலாக, அவரை சீனியர்கள் சிலர் ஜாதி பெயரை சொல்லி அடிக்கடி கேலி செய்து வந்துள்ளனர். அவர் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர் மேலும் அந்த கோட்டாவில் அவருக்கு சீட் கிடைத்துள்ளது.

இதனை காரணம் காட்டி அந்த சீனியர்கள் நாளுக்கு நாள் புதுப்புது விதமாக பாயலுக்கு டார்ச்சர் செய்ய தொடங்கியுள்ளனர். ஒருகட்டத்தில் இது குறித்து தனது கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் பாயல் கூறியுள்ளார். ஆனால் மருத்துவக் கல்லூரிகளில் ரேகிங் இயல்பான ஒன்று போக போக சரியாகிவிடும் என கணவர் கூறியுள்ளார்.

ஆனால் நாள் ஆக ஆக ஜாதியை கூறி பாயலை கேவலப்படுத்தும் போக்கு கல்லூரியில் அதிகமாகியுள்ளது. இதனால் மன உளைச்சல் தாங்க முடியாத பாயல் தாத்வி, தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அவரை தற்கொலைக்கு தூண்டிய சீனியர் மாணவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.