ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு! தேர்தல் ஆணையத்தை நெருக்கும் பாஜக!

புள்ளப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு எனக்கு என்னடா தெரியும்னு வடிவேலு சொல்றது போலத்தான், தமிழிசையின் ட்வீட் இப்போது தூள் பறத்துகிறது.


இன்று அவர் போட்டுள்ள ட்வீடில், ‘‘ஒடிசா புயலுக்கு செய்ததைப் போலத்தான் கஜா புயல் வந்தபோதும் பிரதமர் செய்தார். ஒரு டுவிட்டர் செய்திகூட அனுப்பவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்தார். ஏன் வரவில்லை, ஏன் வரவில்லை என்று வாழைப்பழக் கதை போல் கேட்ட ஊழல் களவாணிகளே, இதுதான் பி.எம்.ஓ. நடைம்ஜுறை, ஆக! புரிந்ததா? ஆக! ஆகா? ஆக’ என்று கலாய்த்திருக்கிறார்.

அட, தமிழிசையா இப்படி ஸ்டாலினை கிண்டல் செய்வது என்று பா.ஜ.க.வினர் ஆச்சர்யமாகப் பார்க்க, தி.மு.க.வினர் முகம் சிவக்கிறார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று பிரசாரம் செய்தது, தேர்தல் விதிமுறைப்படி தவறு என்று பா.ஜ.க.வினர் இன்று தேர்தல் கமிஷனில் முறையிட்டுள்ளனர்.

தப்பும் தவறுமாக பிரசாரம் செய்ததால் ஏற்கெனவே மாயாவதிக்கும் யோகிக்கும் தேர்தல் கமிஷன் தடை போட்டது. அதேபோன்று ஸ்டாலினுக்கும் தடை கேட்கிறது பி.ஜே.பி. அதுசரி, நம்ம சாகுதானே இருக்கார், தடை போட்டாலும் போடுவார்.