என் அம்மாவோட புருசன் அவன்..! தினமும் என்னை ரேப் செய்வார்! பாருங்க எங்க சூடு வச்சிருக்கான்னு..! 12 வயது திருச்சி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

திருச்சி: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்தனர்.


ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 24 வயது நபர் ஒருவர், ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். ஆனால், மனைவி வீட்டில் இல்லாத நிலையில், 12 வயதான அந்த சிறுமியை பாலியல் ரீதியாக, அடிக்கடி சித்ரவதை செய்ய தொடங்கியிருக்கிறார். மகள் முறையில் உள்ள சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து மகிழ்ந்ததோடு, அவளது உடல் முழுக்க, அயன் பாக்ஸ் மூலமாக, சூடு போட்டு, காயப்படுத்தியும் அந்த கொடூரன் ரசித்து வந்துள்ளான்.

இதனை அந்த சிறுமி போன் உதவியுடன் ரகசியமாக வீடியோ படம் பிடித்திருக்கிறாள். இதனை சமூக ஊடகங்களில் பகிர, அது அப்படியே டிரெண்டிங் ஆகி, குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள முரளிகுமார் என்பவரின் பார்வைக்கு சென்றுள்ளது.  

அவர் உடனடியாக, இதன்பேரில் திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் உடனடியாக அந்த சிறுமியை மீட்டனர். சம்பந்தப்பட்ட நபரையும் கைது செய்தனர்.