2 குழந்தைகள் இருக்கும் போது வேறு ஒருவனுடன் குடும்பம் நடத்திய 28 வயது பெண்! கண்டுபிடித்து அழைத்து வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருவள்ளூர் அருகே உள்ள இலங்கை முகாமில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து பெண், தனது கள்ளக்காதலனின் பிரிவை தாங்க முடியாமல் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்புயும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை முகாமில் வாழ்ந்து வருபவர் ஜெய ரூபா. இவருக்கு சுமித்ரா என்ற பெண் உள்ளது. இவருக்கு 28 வயது ஆகிறது. இந்நிலையில், அதே முகாமில் வசிக்கும் பத்திநாதன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சுமித்ரா அவரின் தாயார் வீட்டில் இலங்கை முகாமில் வசித்து வருகிறார். அவரின் குழந்தைகளும் அதே முகாமில் வசித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் சுமித்ரா கடந்த 21ம் தேதியன்று முகாமிலிருந்து மாயமாகியுள்ளார். இதனை அடுத்து ஜெய ரூபா பல இடங்களில் தேடி வந்துள்ளார். இதற்கிடையில் சுமித்ரா கவரைப்பேட்டை என்னும் பகுதியில் ஒருவருடன் வசித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற அவர் தாயார் சுமித்ராவை கண்டித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டுக்கு அழைத்து வந்த பின்னர் குழந்தைகள் 2 உள்ளது நீ அவர்களை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுமித்ரா தனது கள்ளகாதலன் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் நேற்று இரவு தீக்குளித்து உள்ளார் . இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து கொண்டு வந்து பார்த்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து. விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.