குழந்தைகள் இருவருக்கும் விபரீத குறை! இளம் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு!

திருவள்ளூர் அருகே இரண்டாவது மகனும் வாய்பேச முடியாது என மருத்துவர்கள் கைவிட்டதால் மன உளைச்சலில் மகனை கொலை செய்துவிட்டுத் தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


போரூர் அடுத்த தெள்ளியார் அகரத்தை சேர்ந்தவர் மகேஷ் மனைவி அஷ்வினி இருவருக்கும் பிரதீப் (4வயது) மற்றும் சக்திவேல் (2) இரு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் பிரதீப் பிறவியிலேயே வாய் பேச முடியாத குறைப்பாடுடன் பிறந்தவர் எனினும் முடிந்த அளவில் அனைத்து மருத்துவ சிகிச்சை முறையும் முயற்சி செய்த நிலையில் தற்போது பேச்சு பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டாவது மகன் சக்திவேல் பரிசோதனை செய்யபட்டு அதே போல வாய் பேச முடியாத குறைப்பாடு உள்ளதாக கண்டறியபட்டது. மேலும் இந்த நிலைக்கு மருத்துவம் செய்ய இயலாது என மருத்துவர்கள் கை விரிக்க தாய் அஷ்வினி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதற்கிடையில் மூத்த மகன் பிரதீப்பை மகேஷுடன் பாட்டி வீட்டிற்க்கு அனுப்பி வைத்த அஷ்வினி, இரண்டாவது மகனை கழுத்தை நெறித்து கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு திரும்பி வந்த மகேஷ் மனைவி மற்றும் மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

பின்னர் காவல் துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் உடனடியாக விரைந்த போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.