பெற்ற குழந்தை வாயில் துணியை திணித்து மூச்சை அடக்கி கொலை செய்த கொடூர தாய்..! வேலூர் பகீர்! அதிர்ச்சி காரணம்!

வேலூரில் குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் வாயில் துணியை வைத்து அமுத்தி கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


வேலூர் மாவட்டம் வாலாஜாவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கௌரிசங்கர் இவரது மனைவி பவித்ரா இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ரம்யா மௌலிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வந்துள்ளார்.

தனது இரு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துவந்து பவித்ரா பராமரித்து வந்துள்ளார்.இதையடுத்து அவரது கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.இந்நிலையில் பவித்ரா தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டில் வைத்துக்கொண்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே துணிக்கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவரின் மேல் உள்ள கோபத்தில் பவித்ரா அவர்களது வீட்டிற்கு செல்லாமல் தனிமையிலே இருந்து வந்துள்ளார். இதையடுத்து தனது குழந்தை இரவு நேரத்தில் அழுதுகொண்டு இருந்துள்ளது.

குழந்தையை சமாதானம் செய்ய பவித்ரா பல்வேறு முயற்சிகளை எடுத்து மௌலிகா அழுவதை நிறுத்தவில்லை இந்நிலையில் அருகில் இருந்த துணியை எடுத்து மௌலிகாவின் வாயில் வைத்து அமுத்தியுள்ளார். இந்நிலையில் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது.

இதையடுத்து உடனே அதிர்ந்த பவித்ரா குழந்தையை எடுத்துக்கொண்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பவித்ரா கதறி அழுதுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் குழந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்த அவரது தாய் பவித்ரா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரையும் கைது செய்துள்ளனர்.