பாலுக்காக அழுத குழந்தை! வாயை பொத்தி கொலை செய்த கொடூர தாய்! வாட்ஸ்ஆப்பால் அரங்கேறிய விபரீதம்!

கேரளாவில் வாட்ஸ் அப் சாட்டிங் மோகத்தால் ஒரு பெண் பாலுக்காக அழுத தனது குழந்தையை வாயை மூடி கொன்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது..


கேரள மாநிலம் சேர்த்தல பட்டினங்காடு என்ற இடத்தைச் சேர்ந்த பெண் ஷரோன் ஆதிரா. இந்தக் கொடூரியின் ஒன்றரை வயதுக் குழந்தை பெயர் ஆதிஷா. கடந்த 30-ம் தேதி இரவு திடீரென்று குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக கூறிய ஆதிரா, கதறி அழுது ஊராரை நம்பச் செய்ய முயன்றார்.. 

ஆனால் குழந்தையின் சடலம் கிடந்த விதம் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எந்த காயமும் இல்லாததோடு குழந்தை மூச்சு திணறி குழந்தை இறந்தது தெரியவந்தது. 

இதையடுத்து குழந்தையின் தாய் ஆதிரா மீது சந்தேகம் வலுக்க போலீசார் அவரைப் பிடித்து போலீஸ் சடங்குகளுடன் விசாரித்ததையடுத்து அதிர்ச்சியளிக்கும் உண்மையை வெளியிட்டார் ஆதிரா.

தான் தனது தோழியுடன் மொபைல் ஃபோனில் வாட்ஸ் அப் சாட் செய்துகொண்டிருந்த போது குழந்தை பாலுக்கு அழுததாகவும், குழந்தை விடாமல் அழுததால் கோபத்துடன் குழந்தையின் வாயைப் பொத்தியதாகவும் தெரிவித்தார். 

குழந்தையின் வாயைப் பொத்திய நிலையிலேயே தன்னை மறந்து ஆதிரா மீண்டும் வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் ஆழ்ந்துவிட குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஆதிராவை கைது செய்தனர்.