கொல்லம்: மாமியாரை கொன்றதாகக் கூறி 41 வயது கேரள பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
என் மருமகளுக்கு அவன் கூட தொடர்பு இருக்கு..! மாமியார் வெளியிட்ட திடுக் தகவல்..! பிறகு அரங்கேறிய பரிதாபம்!

கொல்லம் பகுதியை சேர்ந்தவர் கிரிதா. 41 வயதாகும் இவருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனை கண்டுபிடித்த அவரது மாமியார் ரேமணி அம்மா (66 வயது) அடிக்கடி, கண்டித்து வந்துள்ளார்.
மாமியாரின் விமர்சனங்களை பொறுக்க முடியாத கிரிதா, அவரை கடந்த டிசம்பர் 11ம் தேதியன்று ஆள் இல்லாத நேரம் பார்த்து, துணி துவைக்கும் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி போலீசார் விசாரித்து வந்த நிலையில், டிசம்பர் 24ம் தேதி கிரிதா உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.