இரண்டு பெண் உறுப்பு..! 2 கர்ப்ப பை..! அதிசய பெண்மணிக்கு பிறந்த அற்புத குழந்தை! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

லண்டன்: இரண்டு பெண்ணுறுப்பு, கருப்பை மற்றும் கருப்பை வாய் இருந்தும், பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்று சாதித்துள்ளார்.


எலியனார் ரோவ் என்ற 36 வயது பெண், 5 ஆண்டுகளுக்கு முன், குழந்தை பெறுவதில்  சிக்கல் இருந்ததால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார். அத்துடன் உடலையும் பரிசோதனை செய்துகொண்டார். அப்போதுதான் அவருக்கு ஒரு விசயம் தெரியவந்தது.

அதாவது, அவருக்கு மிக வித்தியாசமான உடலமைப்பு உள்ளதாக, மருத்துவர் தெரிவித்தார். ஆம், இரண்டு பெண்ணுறுப்பு, கர்ப்பப் பை மற்றும் கர்ப்பப் பை வாய் இருப்பதால், கரு தரிக்க வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதன்பேரில், தனது கரு முட்டை ஒன்றை எடுத்து, மருத்துவர்கள் உதவியுடன், எலியானா பாதுகாத்து வைத்தார்.  

பிறகு, தனது பெண்ணுறுப்பை இரண்டாகப் பிரிக்கும் சதைப் பகுதியை மருத்துவர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து, அவர் நீக்கிவிட்டார். இதன்மூலமாக, இரண்டு கர்ப்பப் பை மற்றும் கர்ப்பப் பை வாய் மட்டும் அவருக்கு இருந்தது. ஆனால், பெண்ணுறுப்பு ஒன்றுதான் என்பதால், உடலுறவு செய்வது எளிது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன்பேரில், 2015ல் கிறிஸ் என்பவரை எலியானா திருமணம் செய்துகொண்டார். இருவரும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட முயற்சி செய்த நிலையில், ஒருவழியாக, கடந்த 2018 நவம்பரில் எலியானா கர்ப்பம் தரித்தார். மிகுந்த கவனத்துடன், கருவை பராமரித்து வந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.  

எலியானா, கிறிஸ் தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.