வப்பாட்டியும் வச்சிப்ப..! அம்மாட்டயும் வருவியா? பெற்ற தந்தையை காரோடு எரித்த விபரீத மகன்! பதைபதைப்பு சம்பவம்!

கரூர் அருகே கணவனை மனைவி மற்றும் மகன் இருவரும் சேர்ந்து எரித்து நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.


கரூர் மாவட்டம் பரமத்தி அருகே எரிந்த நிலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காருக்குள் ஒருவரின் சடலம் கிடந்ததை கண்டெடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பிறகு, சடலம் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர்.  

விசாரணையில், கார் உரிமையாளர் ரங்கசாமி என்றும் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரங்கசாமியின் மனைவி மற்றும் மகன் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.  

இந்த விசாரணையில் இருவரின் பதிலும் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  

அப்போது ரங்கசாமி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இதை மனைவி கவிதா மற்றும் மகன் அஸ்வின் இருவரும் கண்டித்துள்ளனர். தொடர்ந்து கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த ரங்கசாமி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவரை மகனுடன் சேர்ந்து கொலை செய்து, காரில் ஏற்றி வேறொரு பகுதிக்கு எடுத்துச் சென்று வீசிவிட்டு வருவதற்கு புறப்பட்டுள்ளனர்.  

பரமத்தி அருகே கார் செல்லும் போது சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி பழுதானது. செய்வதறியாது தவித்த மனைவி மற்றும் மகன் இருவரும் அதே இடத்தில் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று அறிந்து, காரை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  

இந்த உண்மை போலீசாரின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் அறிந்த ஊர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.