திருத்தணியில் 'தீரன் பட பாணியில் கொடூரம்! தலையில் அடித்து தாய் கொலை! அயன்பாக்ஸ் வயரால் மகன் கழுத்து நெறிப்பு! அதிர வைக்கும் காரணம்!

திருத்தணி அருகே வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் மகனை கொடூரமாகக் கொலைசெய்த கும்பல் பீரோவிலிருந்த பணம் மற்றும் நகைகளையும் அள்ளிச்சென்றது.


திருத்தணியை அடுத்த பெருமாள்தாங்கல் புதூர், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் காவலாளியாகப் பணியாற்றுகிறார். இவரின் மனைவி விஜி (40) இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகளுக்குத் திருமணம் ஆன நிலையில் மகள் அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

மகனின் பெயர் போத்திராஜ் (10). அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில் வனபெருமாள் நேற்றிரவு பணிக்குச் சென்றுவிட்டார். பணி முடிந்து இன்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்துகிடந்தது. வீட்டின் ஹாலில் போத்திராஜ் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.

அதைப் பார்த்து வனபெருமாள் அதிர்ச்சியடைந்தார். கதறியபடி மனைவி விஜியைத் தேடினார். அவர் வீட்டின் பின்புறத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வனபெருமாள், திருத்தணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜி, போத்திராஜ் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்த மோப்பநாய்அருகிலுள்ள டயர் கம்பெனியை நோக்கி ஓடியது.

அதன்பிறகு, அந்தப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே நாய் நின்றது. இதனால், திருமண மண்டபத்திலிருந்து கொள்ளையர்கள் வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், வீட்டில் விஜியும் போத்திராஜிம் இருந்துள்ளனர். அப்போதுதான் இருவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்களை விஜியும் அவரின் மகன் போத்திராஜும் தடுத்தபோது அவர்கள் இருவரையும் கொள்ளைக் கும்பல் கொலைசெய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. அங்கு, வடமாநிலங்களிலிருந்து லாரிகள் வருவதுண்டு. அந்தக்கம்பெனியில்தான் வனபெருமாள் காவலாளியாகப் பணியாற்றுகிறார். இதனால், வடமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்த பாவரியா கொள்ளையர்கள் என்று தெரியவந்தது. லாரிகளில் வரும் இந்த கொள்ளைக் கும்பல், சாலையோரங்களில் தங்குவார்கள். ஊருக்குள் சென்று நோட்டமிடுவார்கள். பிறகு கைவரிசை காட்டுவார்கள். அதன்பிறகு,

அந்த இடத்திலிருந்து அவர்கள் வேறு இடங்களுக்குத் தப்பிவிடுவார்கள். என போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அப்பகுதியில் வலைவீசி தேடி வருகின்றனர்.