கண்ணாடியில் மரண சாசனம்! தாயுடன் பெண் என்ஜினியர் தற்கொலை! முதுகெலும்பை சில்லிட வைக்கும் சம்பவம்!

சென்னையில் பெண் மென்பொறியாளர் தனது தாயுடன் தூக்கில் தொங்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை கொளத்தூரில் மாவு கடையில் வேலை பார்த்து வந்தவர் மாலதி. இவரது ஒரே மகளான ஷர்மிளா மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இரண்டு மாதங்களாக இவர் பணிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்ற போலீசார் வீட்டை உடைத்து உள்ளே சென்ற போது, தாயும் மகளும் தூக்கில் சடலமாக தொங்கினர். தடயங்களை சேகரித்த போலீஸாருக்கு, முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு தடயம் கிடைத்தது. அந்தக் கண்ணாடியில் சில வரிகள் எழுதப்பட்டிருந்தன.

வீட்டுக்கு கொடுத்திருந்த அட்வான்ஸ் பணத்தை உறவினர் ஒருவரிடம் கொடுத்து விடுமாறு அதில் கூறப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் எதற்காக இந்த முடிவை எடுத்தனர் என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணையில் இறங்கிய போது, மாலதியின் சகோதரரான அசோக் குமார் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சிகரமாக அமைந்தது.

அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? அவரது தற்கொலைக்கும் மாலதி ஷர்மிளாவின் முடிவுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அசோக்குமாரை தான் சர்மிளாவுக்கு மணமுடித்து வைப்பதாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் இச் சம்பவங்கள் அனைத்தும் நடந்துள்ளன. மாலதி மற்றும் அசோக்குமாரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை லாக் செய்யப்பட்டு இருப்பதால் சிக்கல் நீடிக்கிறது. மேலும் ஷர்மிளா எதற்காக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார் என்பதும் மர்மமாகவே உள்ளது.