ரூபாய் 100 லட்சம் கோடிக்கு ஆசைப்படும் மோடிஜி! வாய்ப்பே இல்லையாமே ராஜா?

சுதந்திர தின உரை நிகழ்த்திய மோடி ஏராளமான திட்டங்களை அடுக்கினார்.


அனைத்துத் திட்டங்களுக்கும் கோடிகளில் பணம் கொட்டப்படும் என்றும் தெரிவித்தார். அதுக்கு பணம் எங்கே இருக்கு என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

அவரைப் போலவே, மோடி சொன்ன முதலீடு குறித்தும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பதும் சாத்தியமில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 150 லட்சம் கோடி. இதில் அரசின் செலவு என்பது 12 சதவீதம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 14 சதவீதமாக இருந்தது இப்போது 12 சதவீதமாக குறைந்திருக்கிறது. தனியார் முதலீடுகள் இல்லை.

3 முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை. வங்கிகளில் சேமிப்பு குறைந்திருக்கிறது. இந்த நிலையில், வருடத்திற்கு 20 லட்சம் கோடி முதலீடு எங்கிருந்து வரும். அரசு தன்னுடைய தினச் செலவுக்கே கடன் வாங்குகிறது. அப்படியிருக்கும்போது எப்படி முதலீட்டிற்கு பணம் வரும் என கேள்வியெழுப்புகிறார் பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

ஒருவேளை செல்லாதுன்னு பொதுமக்களிடம் இருந்து வாங்கிய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து புழக்கத்தில் விடப்போறாரோ..?