டெல்லியில் கெத்து காட்டிய திமுக! மீண்டும் வென்ற தமிழ்! தபால்துறை தேர்வை ரத்து செய்த மோடி!

வழக்கமாக தமிழிலும் தேர்வு நடத்தும் தபால்துறை, திடுதிடுப்பென்று ஆங்கிலம், இந்தியில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும் என்று கெடுபிடி செய்தது.


தபால் துறை தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்றும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.  இந்த விவகாரத்திற்காக தமிழக சட்டசபையில், டெல்லி நாடாளுமன்றத்திலும் தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அஞ்சல் பணியில் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வந்திருப்பதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்கள். பா.ஜ.க. அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே தமிழை புறக்கணிப்பதாக மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து, இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தார் வெங்கய்யா நாயுடு. அவரது பரிந்துரையை அரசு ஏற்றது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தபால் துறை தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்தது. இது, தி.மு.க.வின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். கெத்து காட்டிட்டாங்கப்பா...