கலப்பட தேங்காய் எண்ணெய்யால் வழுக்கை ஏற்படுகிறதா?

வழுக்கை, முடி கொட்டுதல், முடி நரைத்தல் போன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது கலப்பட எண்ணெய் பயன்படுத்துவது ஆகும். ஏனென்றால் கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்களில் பெரும்பாலானவை கலப்படமே.


* மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து, ஒரிஜினல் தேங்காய் எண்ணெய் என்று விற்பனை செய்கிறார்கள். இந்த மினரல் எண்ணெய்க்கு தனிப்பட்ட நிறம், மணம், குணம் இருக்காது என்பதால் எளிதில் கலப்படம் செய்கிறார்கள்.

* இந்த ஆயிலைத் தொடர்ந்து பயன்படுத்தினால் தோல் வறட்சியாகி முடி கொட்டத் தொடங்கும். அரிப்பு ஏற்பட்டு முடியின் நிறமும் மாறத் தொடங்கும்.

* குழந்தைகளுக்கு இந்த கலப்பட எண்ணெய் பயன்படுத்தும்போது, வெகு சீக்கிரம் தலைமுடி பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

கலப்படம் இல்லாத நல்ல தேங்காய் எண்ணெய்க்கு முடியை நன்கு வளர வைக்கும் தன்மையும் கருமையாக்கவும் குணமும் உண்டு. அதனால் ஒரிஜினல் தேங்காய் எண்ணெய் என்பதைக் கண்டறிந்து, அதனை மட்டுமே பயன்படுத்துங்கள். முடிந்தவரை செக்கில் ஆட்டிய எண்ணெய் தேர்வு செய்து வாங்குங்கள்.