விபத்தில் சிக்கி கதறிய குடும்பம்! வேடிக்கை பார்த்த கூட்டம்! அந்த வழியாக சென்ற அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்!

கோபி அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கிருஷ்ணன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஈரோடு சென்று கொண்டிருந்தபோது தாசம்பாளையம் அருகே எதிரே வந்த லாரி மீது மோதி திடீரென விபத்துக்கு உள்ளானார். உடனடியாக 108 க்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். 

அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அவ்வழியாக சென்ற அமைச்சர் செங்கோட்டையன், விபத்தை கண்டதும் உடனடியாக இறங்கி அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வழி செய்தார். 

தனது பாதுகாப்பிற்கு வந்த மற்றொரு காரின் மூலம் அவர்களை ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்ததோடு, உரிய மருத்துவரிடம் நடத்தக்கோரி சிகிச்சை அளிக்குமாறும் தெரிவித்து விட்டுச் சென்றார்.