சூர்யா அரை வேக்காடாம்? ஜால்ரா அமைச்சரும் திட்டுறதுக்கு வந்துட்டாருல்ல!

புதிய கல்விக்கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய சூர்யாவுக்கு பா.ஜ.க.வை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை எதிர்ப்பு.


புதிய கல்விக்கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய சூர்யாவுக்கு பா.ஜ.க.வை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை போன்ற அறிவாளிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூவும் அரைவேக்காடு என்று திட்டியிருக்கிறார். சூர்யாவுக்கு இதைச் சொல்வதற்கு என்ன தகுதி என்று கேட்கிறார அமைச்சர்.  பத்தாண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவை செய்வது தகுதி இல்லையா? இது தகுதி இல்லை என்றால் வேறு என்ன தகுதி எதிர்பார்க்கிறார் அமைச்சர்..?

ஆண்டுதோறும் 1000க்கு மேற்பட்ட இன்ஜியரிங் மாணவர்கள் 300க்கு மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், 500க்கும் மேற்பட்ட அறிவியல் துறை மாணவர்கள்...என சுமார் 2,500 மாணவர்களுக்கு,அதுவும் வாழ்க்கையின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களைத் தேடிக் கண்டடைந்து, தன்னுடைய அகரம் அமைப்பு மூலம் உயர்கல்வி தருகிற சமூகக் கடமையாற்றுவதே மிகப் பெரிய தகுதிதானே!

சூர்யா இந்தக் கருத்து பேசுவதற்கு முன்பாக கல்வியாளர் வசந்தி தேவி,பேராசிரியர் கல்யாணி,ஆசிரியர் மாடசாமி ஆகியோருடன் கலந்து பேசி தகவல்களை உள்வாங்கி உணர்ந்து பேசியுள்ளார். அதனால் வீணாக மோதாதீர்கள் ஜால்ரா கும்பல்களே...