பகவத் கீதைக்கு பலே ஜால்ரா? மீண்டும் கட்சி மாறுகிறாரா அமைச்சர் பாண்டியராஜன்?

கட்சி மாறுவதற்கு கொஞ்சமும் அச்சப்படாதவர் மாஃபா.பாண்டியராஜன். அவரை நம்பிய விஜயகாந்தை கைவிட்டு ஜெயலலிதாவிடம் தஞ்சம் அடைந்தார். அதன்பிறகு ஓ.பி.எஸ். அணியில் இருந்து இ.பி.எஸ். அணிக்குத் தாவினார்.


இப்போது பா.ஜ.க. என்ன செய்தாலும் சூப்பர் என்று கைதட்டி பாராட்டும் முதல் நபராக மாஃபா.பாண்டியராஜன் இருந்துவருகிறார். பகவத்கீதையை எப்படி நுழைத்தீர்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் சம்மன் அனுப்பி விசாரிக்கும் நிலையில், பாராட்டு தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் பாண்டியராஜன்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், “பகவத் கீதையை பாடமாக அறிவித்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. பகவத் கீதையை மதம் சார்ந்த புத்தகமாக நான் பார்க்கவில்லை. ஒரு பண்பாடு சார்ந்த புத்தகமாக பார்க்கிறேன். பாரத பண்பாட்டுக்கு ஆழமான நங்கூரம் பகவத் கீதை’’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அ.தி.மு.க.வில் இரண்டு அமைச்சர்களுடன் பெரும் மோதலில் ஈடுபட்டிருக்கும் பாண்டியராஜன், விரைவில் பா.ஜ.க.வுக்கு பல்டி அடிப்பார் என்றுதான் சொல்லப்படுகிறது. அப்பூடியா பாண்டி சார்?